ஆச்சாள்புரம்
ஆற்றைக் குறுக்கே நடந்தும் கடக்கலாம். மழைக் காலத்தில் அக்கரைக்குத் தெப்பம் விடுவார்கள். அக்கரையில் ஒரு மேடு ஏறினால் ஆச்சாள்புரம், இரண்டு தெருக்கள். ஒரு தெரு முழுக்கக் குடிசைகள். மறு தெரு முழுக்க ஓட்டு வீடுகள். ஏதோ கான்ட்ராஸ்ட் ஓவியம் போல்.
ஊர்த் தொடக்கத்தில் தருமராஜாகோவில். கோவில் என்றால் பிராகாரமும் கோபுரமும் வைத்துக் கட்டியதல்ல. ஒரு மொட்டை மாடிவீடு; வரிசையாக ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை அளிக்கம்பி வைத்திருப்பார்கள். உள்ளே ஜிகினா ஒட்டிய தர்மராஜாவின் பெரிய படம். அந்தக் காலத்துப் பெரிய எழுத்துப் புத்தகங்களில் பால் வேற்றுமை தெரியாதவாறு வரையப்படும் தஞ்சாவூர் பாணிச் சித்திரம், வெளியே நின்று பார்ப்போருக்குத் தர்மராஜாவை ஜெயிலில் வைத்திருப்பதைப் போல் தோன்றும்.
ஓட்டு வீடுகளுக்கு இடையே ஓடும் வீதி தேரோடும் சாலையண்tங் பெரியது. ஞ்ஏ’; காலத்துக் கட்டிடங்கள். சுண்ணாம்பின்றி இளிக்கும் சுவர்கள். ஒரு ஞூணீ.டுக போனால் ஊர் முடிந்து பாதை ணங்கி வடமேற்கே திரும்புகிறது.
சற்று நடந்தால் கிராமத்து மாரியம்மன்களுக்கே உரிய சாயல். ஒரு சிறு கோவில். மேலே திறப்பு. காரையும் கோரையும் சுற்றி முளைத்திருக்க, ஆச்சாள் புரத்தின் பயப்பிராந்திக்குப் பாத்திரமாக ஒரு துருப்பிடித்த சூலத்தின் முன் பத்ரகாளியம்மன்கொலுவீற்றிருக்கிறாள்.
பிணங்கிப்போகும் பாதை வண்டிபோகும் ஓனி வழி. கூப்பிடுதூரம் போனால், பாதையின் எதிரும் புதிருமாக இரண்டு செண்பக மரங்கள். இரண்டின் அடியிலும் தர்ம காரியங்களில் ஒன்றாய்க் கருதி உள்ளூர் செல்வந்தர்கள் போட்டிருக்கும் சுமைதாங்கிகள்.
கோடை வெக்கையிலும் செண்பக மரத்தடி குளிர்ந்திருக்கும். அந்தப் பேச்சை எடுத்தாலே ‘ஆத்தாள் மகிமை’ என்று ஊர்வாசிகள் அற்புதம் கொண்டாடி புத்தி போட்டுக் கொள்வார்கள்.
நினைவைக் கிறக்கும் செண்பகவாசம். சில்லிட்டிருக்கும் சுமைதாங்கி. வழியோடு போகும் பாதசாரியை மயக்கி ,எடீ;ஒச் சற்றுக் காலோய்ந்து அமரச் செய்யும் அடர்ந்து வளர்ந்த செண்பக மரங்கள், உயரத்தில் பந்தல் விதானம்போல் வளைந்து ஒன்றையொன்று பற்றித் தழுவின. காற்று வருடும் குளிர்ச்சி. வாசம் மயக்கும் அந்தச் செண்பக மரங்களை எதிரும் புதிருமாக எந்த ரசிகனோ ஒரு தூரக் கனவிலே நட்டு வளர்த்திருக்க வேண்டும். ஊரின் மோன எழிலுக்கு அவை ஒரு முத்தாய்ப்பு.
ஆச்சாள் புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒரு ஜமாபந்தியில் கலெக்டரிடம் ஊர் கூடி மனுக்கொடுத்த பின்னால், ஜில்லா போர்டு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. எங்கோ வெகு தொலைவில் இருந்து வேலை ஏற்றுக் கொள்ள வந்தான் ஆசிரியர் வேணுதான்.
அப்போது வேணு இளைஞன். ஆள் ஒற்றைநாடி. சிவப்பு. உதட்டிலும் விழிகளிலும் குளுமை எதிராளியை மின்னல்போல் இழுத்து வசமாக்கும் பெண்மை கலந்த அழகு. ராஜ நடை. வேணு வீதியில் நடந்தால் ஓட்டு வில்லை வீட்டு ஜன்னல்களில் முத்தொள்ளாயிர மரபுப்படி, பருவமாகிச் செலவாணி ஆகக் காத்திருக்கும் பெண்கள் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் வேணுவுக்கு அப்போது வேறுஏதேதோ கனவுகள்... இளமைக்குரிய லட்சியக் கிறுக்குகள். சங்கீதம்... சித்திரம்... கவிதை என்று ரகத்துக்குக் கொஞ்சம் பரிச்சயம். எதிலோ அபாரமாகச் சாதிக்க வேண்டும் என்ற வேகம், தவிப்பு. எதிர்ப்படும் எந்தப் பெண்ணையும் கவித்துவப் பிரமையோடு ’மங்கலக்கைகள் மஹாசக்தி வாசம்’ என்று பார்க்கிற மனப்பக்குவம்.
ஆனால், எல்லாருமா வேணுவாக இருக்கிறார்கள்?
ஊருக்குக் குடிவந்த முதல் அன்னியன் அவன்தான். பெண்ணைப் பெற்றவர்களுக்கு மனசு துணுக்கென்றது. போகப் போக அவன் கலங்காத நேர்மையோடு நடக்கவே அவர்களுக்கெல்லாம் நிம்மதி பிறந்தது. இருந்தாலும் அவன் குடியிருந்த எதிர்வீட்டில் கிராமக் கர்ணம் கோபால்ராவ், வாசற் படியருகில் அவன் வரும்போதெல்லாம் ஒரு போலீஸ் பார்வை பார்ப்பார்.
வேணு குடியிருக்க வசதியாக வேறு வீடு கிடைக்காததால் ஊர் நாட்டாண்மைப் பெரிய சாமிப்பிள்ளை அந்த வீட்டை ஒழித்துக் கொடுத்தார்.
ஜன்னதூ; திடீணீ;தணீல் நின்றால், கோபால்ராவின் கடுகடுத்த பார்வை. வெளியே வந்தாலும் ஞடீடடூக்டு; அணத பார்வை. கைச் சமையலும், பள்ளிக்கூடம் விட்டால் கவிதைப் புத்தகமோ பிரஷ்ஷோ கதி என்றும் இருந்த வேணுவிற்கு நெடுநாள் வரை கோபால் ராவின் பார்வைக்கு அர்த்தமே விளங்கவில்லை.
ஒருநாள் அடுப்பிலே புகை, அறையிலே மண்டலமிட்டு அடைத்துவிட்டது. கண்ணைக் கசக்கியவாறே அதை வசப்படுத்த வாயை ஊதிக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டு ஜன்னலிலிருந்து யாரோ ‘கல கல’வென்று சிரித்த ஓசை கேட்டது. கை வீசிப் புகையைக் கலைத்தவாறே திரும்பிப் பார்த்தான். காதுக் கம்மலின் மரையைத் திருகியவாறே ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.
வளையல், பற்களின் ஒளி இவைதான் புகைமூட்டத்தினூடே ஒரு கனவாய்த் தெரிந்தன. வாய்விட்டுச் சிரித்துவிட்ட தைரியமே அச்சமூட்டியதால் சரேலென்று அந்தப் பெண் நகர்ந்துவிட்டாள். ஆனால் அந்தச் சிரிப்பு வேணு மனசின் ஊற்றுக் கண்ணில் சிற்றுளியாக மோதிற்று.
சார்ப்பு வைத்த வெறும் காரைக் கட்டிடமாகத் தெரிந்த எதிர்வீடும், கோபால்ராவின் துப்பறியும் பார்வையும் பொருள் பொதிந்தவை ஆயின.
எதிர் வீட்டைக் கடக்கும்போது சிரிப்புச் சத்தம் மட்டும் மனசுக்குள் கேட்கும். அப்புறம் கோபால்ராவைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு பரிதாபம் பிறந்தது.
“சீ என்ன மனிதன்?” என்று அவரைப் பார்க்கும் பொழுது நினைத்துக் கொள்வான். வர வர அவர் பார்வையில் கொஞ்சம் உம்மணா மூஞ்சித்தனம் தெரியவே இந்த மனிதரைக் கொஞ்சம் சீண்டி அலைக்கழித்தால் என்ன என்று குறும்பு செய்யத் தோன்றியது.
வேணு அடிக்கடி வீட்டு வாசற்படியில் வந்து நிற்க ஆரம்பித்தான். ‘கடுகடு’வென்று கடுவன் பூனையைப் போல் கோபால்ராவ் முகம் மாறும் போக்கை திருப்தியாக ரசித்தான். ஜன்னல் கொக்கியில் கண்ணாடி மாட்டி, தலை சீவத் தொடங்கினான். கோபால்ராவ் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் சமயமாகப் பார்த்துக் காரணமில்லாமல் ஜன்னலருகே நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஏதாவது படித்தான்.
“இது என் வீடு. நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். நீர் வேவு பார்க்குமளவு போனால் நான் அதற்கு மேலே போவேன்” என்று கோபால்ராவுக்குப் போக்குக் காட்டுவதைத் தவிர வேணுவிற்கு வேறு நோக்கமில்லை. ஜன்னலருகே கண் சிமிட்டும் நேரம் தோன்றி மறையும் பெண்ணுருவத்தைக் கூர்மையாகக் கவனிக்க அக்கறை பிறக்கவில்லை. கோபால்ராவ் உத்தரவோ என்னவோ அந்தக் கணத்தோற்றம்கூட நின்று விட்டது வேணுவுக்குக் கவலை இல்லை.இதற்குள் ஊர் பரிச்சயமாகி விட்டது. அந்தக் காலத்து ஆசிரியர்களிடம் கிராமம் எதிர்பார்த்த வைத்தியபிரயோகம், பாண்டுபத்திரம் எழுதல், பஞ்சாயத்துத் தீர்ப்பு, சங்கீத ஞானமிருந்ததால் மார்கழி மாத பஜனை, தர்மராஜா கோவில் மகா பாரதப் பிரசமகம் என்று கிராம வாழ்க்கையில் ஊன்றி அவன் கொடி பறந்தது.
‘வேணு வாத்தியார் மாதிரி வருமா’ என்று ஆற்றிலே தண்ணீர் ஓடியதால் அங்கு குளிக்கப் போகும் பெண்கள் மத்தியில் புகழ்.
கோபால்ராவ் உலக நடப்புத் தெரிந்தவர். கர்ணம் அல்லவா? பகையாளியை மடக்க உறவாடுவதைவிட வேறு தந்திரம் கிடையாது என்ற முடிவுக்கு வந்தார்.
ஒரு பண்டிகை தினத்தன்று சின்னப்பையன் ஒருவன் வாழை இலையில் நாலுவடைகளையும், வெள்ளித் தம்ளரில் தளும்பத் தளும்பப் பால் பாயசத்தையும் எடுத்து வந்தான்.
“அப்பா கொடுக்கச் சொன்னார்.”
ராயரை உரித்து வைத்திருந்தான் பையன்.
“என்னடா விசேஷம்?”
“இன்னிக்கு வரலட்சுமி விரதம்.”
வேணு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். கோபால்ராவ், நெற்றியில் கோபிச் சந்தனமும், காதில் கெம்புக் கடுக்கனுமாக நின்று கொண்டிருந்தார்.
“வாங்கிக்கோங்க சார்! இன்னிக்குப் பண்டிகை, பட்சணம், பலகாரம் செய்ய ஒங்களுக்கு எங்கே பொழுது?”
அவர் முகத்தில் அசட்டுச் சிரிப்பு. பரிதாபமாக இருந்தது. வேணு வாங்கிக் கொண்டான். பாயசம் என்னவோ அற்புதமாக இருந்தது.
அதற்கப்புறம் கோபால் ராவ்தான் வேணுவுக்கு அத்யந்த நண்பர். குடும்ப விஷயத்திலிருந்து அந்தக் காலத்துக் கும்பினிக்காரன் புகழ் வரை தெருவோடு போனாலும் வேணுவை இழுத்து வைத்துக் கொண்டு உள் எச்சரிக்கை மறையாது திண்ணையிலேயே பேசினால் தான் அவருக்கு மனம் ஆறும்.
ஆரம்பத்தில் வேணுவுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. காரணம் கால விரயம் ஆவதுதான். போகப் போகப் எதிர்வீட்டு ஆத்மாவைத் திருப்தி செய்வதிலே சற்று அக்கறை பிறக்கவே, சரிப்பட்டுப் போயிற்று.
ராயருக்கு சம்சாரம் தவறி இரண்டு வருஷமாகப் போகிறது. அவர் சொன்னதை வைத்து யூகித்ததில் ஜன்னலிலிருந்து சிரித்தவள்தான் அவருடைய மூத்த பெண்ணாக இருக்க வேண்டும். பட்டணத்தில் அவர் தம்பி வீட்டில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தாளாம். ராயருக்கு அவள்மீது அபார பாசம். மனைவி இறந்துவிடவே, குடும்பப் பராமரிப்பிற்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்தி அழைத்து வந்துவிட்டார். கௌசல்யா - அதுதான் அவள் பெயர். அவளுக்கு அப்புறம் ஆணும் பெண்ணுமாக அரை டஜன். இந்தப் பதினெட்டு வயதில் குடும்ப பாரத்தை அவள் நிர்வகிக்கிற பெருமையை வாய் ஓயாமல் புகழ்வார் ராயர்.
நேரில் பார்க்காவிட்டாலும் தன்னையறியாமல் அந்தப் பெண்ணின் மீது கிரகலட்சுமி என்றொரு மனப்பூர்வமான மதிப்பு விழுந்தது. அதற்கப்புறம் வேணு தவறிக் கூட ஜன்னல் பக்கம் போவதில்லை. ராயரும் தம் துப்பறியும் வேலையை விட்டுவிட்டார். அவருக்கு மனக்களிப்பு. வசமாக வேணுவுக்கு வேலிபோட்ட தம் சமர்த்தை வியந்து கொண்டார்.
ஒரு நாள் சாயங்காலம். ஆற்றிலே ஊரே பூரிக்கும்படி வெள்ளம். தெப்பல்காரர்கள் கயிற்றைச் சுழற்றிச் சுழற்றிப் போட்டு, நாலுபேராகக் கூடி ஆற்றில் நடந்த வண்ணம் தெப்பம் இழுத்தனர். கோவணங் கட்டிய சின்னப் பிள்ளைகள் முதல் வயதான முதியவர்கள் வரை துறையில் கூடி நின்று அந்தக் குதூகலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
மேடு இறங்கி வரும் பாதை ஓரமாக நின்று மலையும் ஆறும் கூட்டிய சௌந்தர்ய மயக்கத்தைச் சித்திரமாக வரைந்து கொண்டிருந்தான் வேணு.
ஆற்று வெள்ளத்தில் தண்ணீர்க் குடத்தை அமிழ்த்தியபடி யாருடைய வருகையோ காலடி ஓசையாகக் கேட்கவே, பின்னல் சரிந்து தொங்க, திரும்பிப் பார்க்கிறாள் ஒரு யுவதி. இதுதான் சித்திரம்.
ஏறக்குறைய முடிந்துவிட்டது. கடைசியாகக் கொஞ்சம் நகாசு வேலை பாக்கி. அதற்குள் வர்ணம் காய்ந்து விடவே தண்ணீர்க் குப்பியைப் பார்த்தான். வர்ணம் குழம்பாகிவிட்டிருந்தது. அதைக் கொட்டி விட்டு, கொஞ்சம் தண்ணீர் எடுத்து வரக் கரையோரத்திற்குச் சென்றான்.
இளம் பெண்கள் கூட்டமொன்று அவனது சித்திரம் இருந்த பக்கமாகத் தண்ணீர்க் குடங்களோடு சென்றது. கலீரென்ற சிரிப்பொலி. திரும்பிப் பார்த்த வேணுவுக்கு வெட்கமாகப் போயிற்று. பெண்கள் கூடிச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“எத்தனை அழகாயிருக்குடீ?”
“ஆற்று வெள்ளம், பரிசல் துறைப் பையன்கள் எல்லாம் நெஜம்மாவே கண் முன்னாலே நிக்கல்லே?”
“பெண் உருவம் மட்டும் என்ன?”
அதற்குள் ஏதோ முணுமுணுப்பு. கணீரென்ற சிரிப்பொலி. நாலு பேராகச் சேர்ந்துவிட்டால் இந்தப் பெண்களுக்கு என்ன பலம் வந்து விடுகிறது!
“கண் அச்சு அசல் கௌசல்யா கண்மாதிரியே இல்லை?”
“ஆமாண்டீ... கரெக்டாச் சொன்னேசௌந்தரம் .”
காரணமற்ற உள்ளக் களிப்பில் மீண்டும் ஒரு சிரிப்பலை சிதறியது.
‘கௌசல்யா... கௌசல்யா... அவளுடைய கண்களைப் போலவா வரைந்துவிட்டேன். அவளை நான் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லையே! யார் நம்புவார்கள்? திக்கென்றது வேணுவுக்கு.
‘சீ’ போங்கடி! ஒங்களுக்கு எது வெளையாட்டுங்கறதே தெரியறதில்லே.”
ஆதங்கப்பட்டது ஒரு குரல். வேணு திரும்பினான். காதுக்கம்மலும் இடுப்புக் குடமும் அந்தி வெயிலில் மின்னின. கோபச்சாயை படிந்த முகத்தோடு திரும்பிய அவள் வேணுவின் பார்வையை எதிர் கொண்டாள்.
ஆ...! அந்தக் கண்கள்....
No comments:
Post a Comment