3
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆலயத்தில் நுழைந்தார் மரியதாஸ்.
சபை நிறைந்துவிட்டது. ஆலயத்தில் பல கண்கள் அவரை அப்போதைக்கப்போது கவனித்தன. ஸ்டீபன் எதையும் கவனியாது கைகளை விரித்து பாதிரிக்குரிய கறுப்பு அங்கியை ஏந்தி நின்றார். கழுத்துப்பட்டி அவர் இன்னும் மதகுருவாக நியமனம் பெறவில்லை என்று அறிவிப்பது மாதிரி பூணூல்போல் மார்பின் குறுக்காகச் சரிந்தது.
ஸ்டீபனைக் குருபீடத்தில் நியமனம் செய்ய வேலூரிலிருந்து பிஷப் வந்திருந்தார்.
நிசப்தம்.
வெளியே மரங்களில் காற்று சலசலப்பது கூடக் கேட்கும் நிசப்தம். உத்தம மனஸ்தாப ஜபம் ஆரம்பமாயிற்று.
“எல்லாம் வல்ல சர்வேசுவரனிடமும்...”
பிஷப் முதலில் தொடங்க அமைதியாக இருந்த சபையினர் மெதுவாகத் திரும்பிச் சொன்னார்கள். பேதங்கள் அழிந்து ஒரே தொனி போன்று ஓர் அபூர்வ ரீங்காரம் போன்று பிரார்த்தனை ஒலித்தது.
சடங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து முடிந்தன. ஸ்டீபன் ரித்த கரங்களில் கறுப்பு அங்கி தொங்கிக் கொண்டிருக்க, பிஷப்பின் முன் மெதுவாகச் சென்று முழந்தாளிட்டார்.
ஏதோ மந்திரங்களை உச்சரித்தவாறே ஸ்டீபனின் சிரசைத் தொட்டு ஆசீர்வதித்தார் பிஷப்.
குருப்பிரகடனம் அவரது வாயிலிருந்து வெளிவந்து, பின்பு மகிமைதாஸின் கழுத்துப்பட்டியை பிஷப் நேராக நிமிர்த்தினார். கரங்களிலிருந்த ஆடையை எடுத்து அவருக்குப் போர்த்தி, தோள் பட்டையில் மடித்து வைக்கப்பட்டிருந்த அங்கியைப் பிரித்து விட்டார். ஒருவர் தட்டிலே ஏந்தி நின்ற செங்கோலை எடுத்து அவருக்கு வழங்கினார். பணிவோடு அதைப் பெற்றுக் கொண்டார் ஸ்டீபன்.
ஸ்டீபன் மகிமைதாஸ் இப்போது அந்த ஆலயத்தின் மதகுரு அந்த சிற்றூரின் தெய்வத் தந்தை.
மரியதாஸின் கண்கள் தழுதழுத்தன. மனம் பொங்கி விம்மியது. ஏசுவின் திருத்தொண்டனாக, அந்த ஊர் மக்களின் ஆத்மீகச் சேவகனாக, ஞானபிதாவாக, இவ்வளவு இளம் வயதில் துறவுக்கோலம் பூண்டு நிற்கும் மகனைப் பார்க்க அவருக்கு மெய் சுவர்த்தது.
ஃபாதர் ஸ்டீபன் முதலாவது சர்வீசை ஆரம்பித்தார்.
“பிதாவுடையவும் சுதனுடையவும்...”
எதிரொலிகள்.
இஸ்பிரியேத்து சாந்தயேனுடையவும்.
“பரிசுத்த ஆவியின் பேராலே...”
மரியதாஸின் கண்கள் குபுகுபுவென்று நனைந்துவிட்டன. கண்ணீர், பெருமையும், ஆனந்தமும் மகனைச் சான்றோனாகக் கண்ட சிலிர்ப்பும் கூடிய கண்ணீர்.
பூஜை பாதி நெருங்கியதும் தேவ வசீகரத்திற்கான ஒற்றை மணி அடிக்கப்பட்டது. மனுஷ குமாரனின் சரீரமாக ரொட்டியையும், ரத்தமாக ஒயினையும் பாவித்து வழங்கும் சடங்கு. ஆடையின் சலசலப்பையும் காலடிகளையும் தவிர யாரோ ஓரிருவர் இருமும் ஓசைதான் கேட்டது.
ஸ்டீபன் மகிமைதாஸ் தந்தையை நெருங்கி வருகிறார். பதினைந்து நாட்களாக அவள் பித்துப் பிடித்தவள்போல் காணப்பட்டாள். இளம் வயதிலேயே வைத்வயம் அடைந்து தன்னந்தனியாக வாழ்ந்து வருவதால், அந்தச் சிறு குடிசையில் பேச்சுத் துணைக்குக்கூட ஆள் கிடையாது. சாலையில் நகரத்திலிருந்த அரசாங்க சந்தனக் கிடங்குக்குச் சென்று கட்டைகளைச் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு, பொழுது மங்கும்போது அரிசியும் காய்கறிகளும் வாங்கிக் கொண்டு திரும்புவாள்... சமைத்துச் சாப்பிட்டு விட்டு, உறங்கிப் பின் விழித்து... வேலைக்குப் போய்த் திரும்பி... இவ்விதமே அர்த்தமின்றி அவளது நாட்கள் தோன்றித் தோன்றி உதிர்ந்தன.
ஏதோ ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட வேளையில் மரியதாஸை சந்தித்தாக அவள் நினைத்தாள். ஒருவரை மற்றொருவர் மயக்காமலே இருவரும் ஒருவருக்கொருவர் சரணடைந்தனர். அதற்குப் பிறகு அவளது வாழ்க்கை நிறைவுற்றது. புதிய யௌவனம் பிறந்ததுபோல் சிரிப்பு அழுகை கோபம் கொஞ்சல் என்று கலகலப்பாயிற்று.
இரவு நேரங்களை அவள் சாதகப்பட்சியின் தாகத்தோடு எதிர் நோக்கத் தொடங்கினாள். சரீரத் தேவை என்பது சாமான்யமானதுதான் என்று உணர்ந்து கொண்ட பிற்காலத்தில், ஆண்மை பொலிந்த அந்தக் காலடியோசைகளிலும், ஒரு பார்வையிலும், ஒரு சிரிப்பிலும் அவள் அனுபவ நிறைவுகளைப் பெறத் தொடங்கினாள்.
மரியதாஸைக் கவர்ந்து கொண்டதாக அவள் கருதவில்லை. அதனாலேயே அவளைத் திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பிய போதும் மறுத்து விட்டாள். அந்தக் குடும்பத்தை அவள் நேசித்தாள். அதன் அங்கமாக மாறுவதிலுள்ள கௌரவத்தை விரும்பி ரசித்தாள். ஆயினும் பதினைந்து வருஷங்களாக, தாயின்றி, தந்தையின் ஸ்தானத்தையே தாயாகக் கண்டு வளர்ந்த குழந்தைகள், அவள் வீட்டுக்கு வந்தால் என்னென்ன குழப்பங்களுக்கு ஆளாவார்களோ? அதனால் மரியதாஸின் குடும்ப வாழ்க்கை என்னவாகுமோ? என்று யோசித்தே அதை மறுத்துவிட்டாள்.
ஸ்டீபன் வந்த பிறகு திடீரென்று மரியதாஸ் வராமல் நின்றது அவளுக்குப் பெரிய சூன்யத்தை ஏற்படுத்திற்று. யந்திரம் போல் சமையல்... யந்திரம் ஓய்வதுபோல் தூக்கஓடுவதுபோல் வேலை; மனசை ஓர் ஏக்கம் மெதுவாகத் தின்று கொண்டிருந்தது.
ஏன்? ஏன்? என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.[தொடரும்]
No comments:
Post a Comment